தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது- கரப்பான் பூச்சி கட்சி

 
தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது


மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது என கரப்பான் பூச்சி கட்சியினர் அறிவித்துள்ளனர்.

மத்திய அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து போராட்டக்காரர்களிடம் விளக்கம் அளித்த அபிஜித், “மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது. பிரதான் பதவி விலகலுக்கு நாளை வரை நேரம் கேட்ட மத்திய அரசு, 2 கோரிக்கைகளை ஏற்பதாக உறுதி அளித்துள்ளது. பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். நாளை 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். போராட்டகார‌ர்கள் மீதான FIRஐ ரத்து செய்ய மத்திய அரசு சம்மதம். உயிரிழந்த நீட் மாணவர்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வேண்டும். மாணவர்களை கைது செய்யும் நடவடிக்கையை டெல்லி போலீஸ் கைவிட வேண்டும். பிரதான் ராஜினாமா செய்யாவிட்டால் நாடு தழுவிய போராட்டம் நடாத்தப்படும்" என்றார்.

டெல்லி மட்டுமில்லாமல் தமிழகத்திலும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்றுள்ளது. பல கல்லூரி மாணவர்களும், பல இடங்களில் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள்.