முதல்வரின் சிறப்பு பூஜைக்கு எதிர்ப்பு- LED திரையில் செருப்பு வீசிய பக்தர்கள்!

 
முதல்வரின் சிறப்பு பூஜைக்கு எதிர்ப்பு- LED திரையில் செருப்பு வீசிய பக்தர்கள்!

கர்நாடக மாநிலம் ஹாசனில் உள்ள ஹாசனாம்பா கோயிலில், முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் குடும்பத்துடன் சிறப்பு பூஜையில் பங்கேற்றார்.


கர்நாடக மாநிலம் ஹாசனில் உள்ள ஹாசனாம்பா கோயிலில், முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் குடும்பத்துடன் சிறப்பு பூஜையில் பங்கேற்றார். இதற்காகப் பொதுத் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால், பல மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர்.  முதலமைச்சரின் சிறப்பு பூஜை ஒளிபரப்பான LED திரை மீது சில பக்தர்கள் செருப்புகளை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர். VIP வருகைக்காகப் பொது பக்தர்களின் தரிசனத்தை ஏன் தாமதப்படுத்த வேண்டும் எனக் கேள்வி எழுப்பினர்.