தாம்பத்திய உறவுக்கு நீண்ட காலம் மறுப்பது கொடுமைப்படுத்துவதற்கு சமம் -பரபரப்பு தீர்ப்பு

 
ச்

தாம்பத்திய உறவுக்கு நீண்ட நாள் மறப்பதும் கொடுமைப்படுத்துவதற்கு சமம் என்று சொல்லி வாலிபருக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம். 44 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த வாலிபருக்கு விவாகரத்து கிடைத்திருக்கிறது.  அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

 உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாழ்ந்து வந்த அந்த வாலிபர்,  கடந்த 1979 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.  திருமணத்திற்கு பின்னர் கணவர் வீட்டுக்கு பெண் செல்லும் சடங்கு கவ்னா என்று அழைக்கப்படுகிறது.  இந்த சடங்கு திருமணத்திற்கு பின்னர் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர்தான் நடந்திருக்கிறது . அதற்கு பின்னரும் கூட அந்தப் பெண் தாம்பத்திய உறவுக்கு மறுப்பு தெரிவித்து வந்திருக்கிறார். 

ஒ

 ஆறு மாதங்களுக்கு பின்னர் மீண்டும் தாய் வீட்டுக்கே திரும்பிச் சென்றிருக்கிறார் அந்தப் பெண்.  இதற்கு மேலும் பொறுமை காக்க முடியாத அந்த வாலிபர் கடந்த 1994 ஆம் ஆண்டில் விவாகரத்து செய்து கொள்ளலாமா என்று மனைவியிடம் கேட்க,  அவரும் அதற்கு ஒப்புதல் சொல்ல,  இருவரும் சேர்ந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

 இது தொடர்பான விசாரணைக்கு அந்தப் பெண் ஆஜராகாமலேயே இழுத்தடித்து வந்துள்ளார் . அது மட்டுமல்லாமல் வழக்கை விசாரித்த நீதிமன்றமும் போதுமான ஆவணங்கள் இல்லை என்று சொல்லி அந்த விவாகரத்து வழக்கு தள்ளுபடி செய்து விட்டது.  இதை எதிர்த்து அந்த வாலிபர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

 இந்த இடைப்பட்ட காலத்தில் அந்த வாலிபர் மறுமணம் செய்து கொண்டிருக்கிறார் . ஏற்கனவே வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இழுத்தடித்து வந்த அந்த பெண் மீண்டும் விவாகரத்து வழக்கில் ஒத்துழைக்காமல் இருந்து வந்திருக்கிறார்.  ஆனாலும் அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பில் கடுமை காட்டி இருக்கிறது.  கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழவே இல்லை என்பது விசாரணையின் மூலம் தெளிவாகிறது.  எந்த காரணமும் இல்லாமல் தாம்பத்திய உறவுக்கு நீண்ட காலம் மறுப்பு தெரிவித்து வருவது கொடுமைப்படுத்துவதற்கு சமம் தான்.  இந்த வழக்கை பொறுத்த வரைக்கும் மிகவும் தொழில்நுட்ப ரீதியாக குடும்ப நலன் நீதிமன்றமும் விசாரணை நடத்தி இருக்கிறது.  அதனால் இந்த வாலிபருக்கு விவாகரத்து வழங்கப்படுகிறது என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.