சிம்லாவில் உள்ள அனுமன் கோயிலில் பிரியங்கா காந்தி வழிபாடு

 
ttn

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வரும் நிலையில் அனுமன் கோயிலில் பிரியங்கா காந்தி வழிபாடு செய்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி தேர்தல் நடைபெற்றது.  இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும்  பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.  36 மையங்களில் எண்ணப்பட்டு வரும் வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் எண்ணப்பட்டு  வருகிறது.

tn

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காலை நிலவரப்படி அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.  இதில் 101 தொகுதிகளுக்கான முடிவுகளில் காங்கிரஸ் 97 தொகுதிகளிலும் , பாஜக 83 தொகுதிகளிலும் , மதசார்பற்ற ஜனதா தளம் 30 தொகுதிகளும், மற்றவை நான்கு தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

tn

இந்நிலையில் கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் சிம்லாவில் உள்ள ஜக்கு கோவிலில் பிரியங்கா காந்தி வழிபாடு செய்துள்ளார். முன்னதாக காங்கிரஸ் சட்டமன்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில் முன்னிலை வகிக்கும் வேட்பாளர்களை கட்சி தலைமை பெங்களூருக்கு வர அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.