புதிய அமைச்சரவையில் இடம்பெறுவோருக்கு பிரதமர் மோடி தேநீர் விருந்து

 
mOdi

மத்திய அமைச்சரவையில் இடம் பெறப்போகும் உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி தேநீர் விருந்து அளித்தார்.


மத்திய அமைச்சராக பொறுப்பேற்கும் எம்பிகளுக்கு தேநீர் பிரதமர் மோடி தேநீர் விருந்து அளித்தார். இன்று காலை 11.30 மணிக்கு டெல்லியில் நடைபெற்ற தேநீர் விருந்தில், ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சர்பானந்த் சோனாவால், ஜிதேந்திர சிங், கர்நாடகா முன்னாள் முதல்வர் எச்டி குமாரசாமி, அமித்ஷா, ஜே.பி.நட்டா, பி.எல்.வெர்மா, பங்கஜ் சவுத்ரி, சிவ்ராஜ் சிங் சவுகான், அன்னபூர்னா தேவி, அர்ஜுன் ராம் மேவால், சிந்தியா, மனோகர் லால் கட்டார், நித்யானந்த் ராய் ஆகியோர் கலந்துகொண்டனர்.வருண் காந்தி மேனகா காந்தியின் கோட்டையாக இருந்த பிலிப்பிட் தொகுதியில் இந்த முறை பாஜக சார்பில் போட்டியிட்ட ஜித்தின் பிரசாத் தேநீர் விருந்தில் கலந்து கொண்டார். காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர், முந்தைய மன்மோகன் சிங் அரசின் மத்திய அமைச்சராகவும் இருந்திருக்கிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு தான் இவர் பாஜகவில் இணைந்திருந்தார் உத்திரபிரதேசம் மாநில பாஜக அரசின் அமைச்சராக இருந்த இவருக்கு இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான மூன்றாவது அரசின் அமைச்சரவையிலும் இவர் இடம் பெற்றுள்ளார்.