பிரதமர் மோடி ஹோலி பண்டிகை வாழ்த்து..

 
modi


நாடு முழுவதும் இன்று ஹோலிப்பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரதமர் மோடி ஹோலி பண்டிகை தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வட இந்தியர்களால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஹோலி. இந்த நாளில் வண்ணப்பொடிகளை ஒருவர் முகத்தில் ஒருவர் பூசி,  மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வர்..   கிருஷ்ணர், தனது தோழி ராதா மீது வண்ணப் பொடிகளை தூவி விளையாடியதும் ஹோலி பண்டிகை கொண்டாட காரணமமாக அமைந்ததாக புராணக் கதைகள் கூறுகின்றன.  அதன்படி இன்று நாடு முழுவதும் ஹோலிப் பண்டிகை கொண்டாட்டம்  களைகட்டியுள்ளது.  ஹோலி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Holi Festival

இந்த நிலையில் பிரதமர் மோடி  நாட்டு மக்களுக்கு  ஹோலி பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர்  வெளியிட்டுள்ள  ட்விட்டர் பதிவில் , “ஹோலி வாழ்த்துகள். மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் வண்ணங்கள் எப்போதும் உங்கள் வாழ்க்கையில் பொழியட்டும். உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் வண்ணமயமான ஹோலி வாழ்த்துக்கள்” என்று  தெரிவித்துள்ளார்.