பீகார் சட்டமன்றத் தேர்தல்: அக்.23ல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி!

பீகார் சட்டமன்றத் தேர்தல்: அக்.23ல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி!

அக்.23ம் தேதி முதல் பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை மோடி தொடங்கவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பீகாரில் வரும் 28ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. 3 கட்டமாக நடைபெறும் இந்த தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியும் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியும் களம் காணுகின்றன. தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே எஞ்சியிருப்பதால் காங்கிரஸும் பாஜகவும் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

பீகார் சட்டமன்றத் தேர்தல்: அக்.23ல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி!

பிரதான கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் தங்களது நட்சத்திர பேச்சாளர்களை பிரச்சாரத்தில் களமிறக்கி வருகின்றன. காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியும், பாஜக சார்பில் நரேந்திர மோடியும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் நடத்த உள்ளனர்.

பீகார் சட்டமன்றத் தேர்தல்: அக்.23ல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி!

இந்த நிலையில், பீகார் சட்டமன்றத் தேர்தலுக்காக பிரதமர் மோடி வரும் 23ம் தேதி முதல் பிரச்சாரத்தை தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் மொத்தம் 12 இடங்களில் பிரச்சாரம் செய்யவிருக்கிறார். ராகுல் காந்தியும், மோடியும் நேரடியாக களம் இறங்குவதால் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.