தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக பிரதமர் மோடி ஒருமனதாக தேர்வு

 
மோடி

ஜூன் 7-ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் கூட்டம்  நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Image

என்.டி.ஏ கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து பிரதமர் மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக தேர்வு செய்யவுள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக பிரதமர் மோடி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். டெல்லியில் நடந்த என்.டி.ஏ ஆலோசனை கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. மேலும்  ஜூன் 7-ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் கூட்டம்  நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Image

மோடி மீண்டும் ஆட்சியமைக்க சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆதரவு தெரிவித்துள்ளனர். டெல்லியில் மோடி இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஆதரவு கடிதத்தை வழங்கினர். கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதத்துடன், விரைவில் குடியரசு தலைவரை மோடி சந்திக்கவுள்ளார். மேலும் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைய சுயேட்சை, சிறு கட்சிகளை சேர்ந்த மேலும் 10 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அமித்ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்  இதையடுத்து வரும் ஜூன் 8-ல் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.