பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி

 
Modi

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி என இன்று அவர் தாக்கல் செய்த பிரமாண பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி

வாரணாசி லோக்சபா தொகுதியில் போட்டியிட பாரத பிரதமர் கர்மயோகி நரேந்திர மோடி இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அப்போது அன்புமணி, ஜி.கே.வாசன் உள்ளிட்ட NDA கூட்டணி கட்சி தலைவர்கள் பிரதமரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். வேட்புமனு தாக்கலுக்கு முன் வாரணாசி கால பைரவர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.

PM Modi filed nomination in Varanasi | வாரணாசியில் வேட்புமனு தாக்கல்  செய்தார் பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி என பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். மேலும் பிரதமர் மோடியிடம் சொந்தமாக வாகனம் இல்லை என்றும், மோடியின் பெயரில் அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை என்றும் தேர்தல் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். 2019 தேர்தலை விட இந்த முறை பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் உயர்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ.2.67 லட்சம் மதிப்புள்ள 4 தங்க மோதிரங்கள் வைத்திருப்பதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.