பெண்ணாக இருப்பதோ அல்லது பழங்குடி சமூக்தில் பிறப்பதோ ஒரு பாதகம் அல்ல... குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

 
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

பெண்ணாக இருப்பதோ அல்லது பழங்குடி சமூக்தில் பிறப்பதோ ஒரு பாதகம் அல்ல என்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

ஜார்க்கண்ட் மாநிலம் குந்தியில் மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்து மகளிர் மாநாட்டில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பேசுகையில் கூறியதாவது: பெண்ணாக இருப்பதோ அல்லது பழங்குடி சமூக்தில் பிறப்பதோ ஒருபாதகமானதல்ல. நம் நாட்டில் பெண்களின் பங்களிப்புக்கு எண்ணற்ற எழுச்சியூட்டும் எடுத்துக்காட்டுகள் உள்ளன. சமூக சீர்த்திருத்தம், அரசியல், பொருளாதாரம், கல்வி, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி, வணிகம், விளையாட்டு மற்றும் ராணுவப் படைகள் மற்றும் பல துறைகளில் பெண்கள் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

பெண்கள்

எந்தவொரு துறையிலும் வெற்றி பெறுவதற்கு அவர்களின் திறமையை அங்கீகரிப்பது இன்றியமையாதது. மற்றவர்களின் அளவில் தங்களை தாங்களே மதிப்பிடாதீர்கள். பெண்களுக்குள் இருக்கும் எல்லையற்ற சக்தியை எழுப்ப வேண்டும். பெண்களின் அதிகாரமளிப்பதில் சமூக மற்றும் பொருளாதார அம்சங்கள் இரண்டும் சமமாக முக்கியமானவை.  ஜார்க்கண்ட் மாநிலத்தின் கடின உழைப்பாளி சகோதரிகள் மற்றும் மகள்கள் அனைவரும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க வல்லவர்கள். 

பாதுகாப்பு பணியில் பெண்கள்

உங்கள் திறமைகளை அங்கீகரித்து நம்பிக்கையுடன் முன்னேறுங்கள். ஜார்கண்டின்  கிராமப்புற பொருளாதாரத்திற்கு பெண்களின் சக்தி ஆற்றலை வழங்குகிறது. எனவே ஜார்க்கண்டில் உள்ள சுயஉதவி குழுக்களுடன் அதிகமான பெண்களை இணைத்து  அவர்களின் திறன் மேம்பாட்டின் மூலம் வேலைவாய்ப்பை வழங்குவது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.