பிரதமர் மோடியிடம் ஆட்டோகிராஃப் கேட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

 
PM Modi

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் ஆட்டோ கிராஃப் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்த நாடுகளை கொண்ட ஜி7 கூட்டமைப்பின்  49வது உச்சி மாநாடு ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில்  தொடங்கி நடைபெற்று வருகிறது. கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய ஏழு உறுப்பு நாடுகள் மட்டுமே கொண்ட இந்த மாநாட்டில் இந்தியா, ஆஸ்திரேலியா, பிரேசில்,  இந்தோனேஷியா, தென்கொரியா, மியான்மர், குக் தீவுகள் ஆகிய நாடுகள் சிறைப்பு விருந்தினர்களாக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். மோடி உலக நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஜி7 உச்சி மாநாட்டின் இடையே ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஜெர்மனி அதிபர் ஒலாப் ஸ்கோல்ஸ், தென்கொரிய அதிபர் யூன் சிக் இயோல், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ உள்ளிட்ட தலைவர்களை தனித்தனியாகச் சந்தித்தார்.  

இதனிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அடுத்தமாதம் அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் அமெரிக்க தலைவர்கள் அரசு விருந்து அளிக்க உள்ளனர். இது குறித்து பேசிய அதிபர் பைடன், பிரதமர் மோடி பேசும் விழாவில் கலந்துகொள்ள நாடு முழுவதும் உள்ள அனைவரும் விரும்புகிறார்கள். எனக்கு டிக்கெட் தீர்ந்து விட்டது என்று வருத்ததுடன் கூறியுள்ளார்.  பிரதமர் மோடி இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டபோது பெரிய கூட்டத்தை எப்படி எளிதாக வழி நடத்தினார் என்பதை நினைவு படுத்தினார். இதனிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடியிடம், ஒரு ஆட்டோகிராப் வேண்டும் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.