#BREAKING பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு

 
petrol

ப்ரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்ந்துள்ளது.

அமெரிக்கா - ஈரான் போரின் எதிரொலியாக பிரீமியம் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், சாதாரண பெட்ரோலின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. நாடு முழுவதும் பிரீமியம் பெட்ரோல் விலையை ஒரு லிட்டர் ரூ.2.09 முதல் ரூ.2.35 வரை விலையை உயர்த்தி BPCL, HPCL, IOCL உள்ளிட்ட பெட்ரோலிய நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. மேற்காசிய போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவரும் நிலையில், ப்ரீமியம் பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ப்ரீமியம் பெட்ரோல் விலை ரூ.99.87 லிருந்து ரூ.101.89ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.