கொரோனா இருக்குமோ என பயந்து கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த தனியார் மருத்துவமனை ! குழந்தையுடன் உயிரிழந்த பரிதாபம் !!

 

கொரோனா இருக்குமோ என பயந்து கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த தனியார் மருத்துவமனை ! குழந்தையுடன் உயிரிழந்த பரிதாபம் !!

உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த கர்ப்பிணி அனுமதிக்கப்படாததால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உத்தரபிரதேச மாநிலம் பிலிபித்தின் ஃபீல்கானா பகுதியில் ஆர்ஷி என்பவர் வசித்து வந்தார். அவரது கணவர் பெயர் ஷிராசுதீன். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆர்ஷி வசிக்கும் பகுதிக்கு வந்தபின், அந்த இடம் சீல் வைக்கப்பட்டுள்ளது. 28 வயதான ஆர்ஷி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து உள்ளூரில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் அவருக்கு கொரோனா இருக்குமோ என்ற அச்சத்தில் அந்த மருத்துவமனை நிர்வாகம் அவரை அனுமதிக்கவில்லை. இதையடுத்து பல மருத்தவமனைகள் சென்றார். அனைவரும் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ரம்ஜான் மாதத்தில் நோன்பை கடைப்பிடித்தால் மனைவி பலவீனமாகிவிட்டதாக கணவர் ஷிராசுதீன் கூறினார்.

கொரோனா இருக்குமோ என பயந்து கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த தனியார் மருத்துவமனை ! குழந்தையுடன் உயிரிழந்த பரிதாபம் !!
கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் இருந்து வருவோரை அனுமதிப்பதில்லை என மருத்துவமனைகள் கைவிரித்துவிட்டன. மேலும் அவரது மனைவியை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்றால் மாவட்ட நீதிபதியிடம் எழுத்துப்பூர்வ அனுமதி பெறுமாறு கூறி அனுப்பியுள்ளனர். இதனால் ஆபத்தான நிலைக்கு சென்ற ஆர்ஷி மயங்கி விழுந்து உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து கணவர் கூறுகையில், “என் மனைவியின் உயிரைக் காப்பாற்ற நான் மருத்துவர்களிடம் கெஞ்சிக் கொண்டே இருந்தேன், ஆனால் என் வேண்டுகோள்கள் அனைத்தும் செவிடன் காதில் சங்கு ஊதியது போல் ஆயிற்று. மருத்துவ சிகிச்சை இல்லாத நிலையில் என் மனைவி ஒரு தனியார் மருத்துவமனைக்கு வெளியே இறந்துவிட்டார் என கண்ணீருடன் தெரிவித்தார்.
இதுகுறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், அனைத்து தனியார் மருத்துவமனைகளும் கடும் நெருக்கடியில் இயங்கி வருகின்றன. மாவட்ட நிர்வாகத்தின் சட்ட நடவடிக்கை குறித்து அஞ்சுகின்றன. COVID-19 நோயாளிக்கு சிகிச்சையளித்தால் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.