தெலுங்கானா தேர்தல்- ரூ.571 கோடி பணம், பரிசு பொருட்கள் பறிமுதல்

 
money seized

தெலங்கானா தேர்தல் விதிமுறைகளை அடுத்து தெலுங்கானாவில் அக்டோபர் 9ஆம் தேதி முதல் தற்போது வரை ரூ. 571 கோடியே 80 லட்சம் மதிப்புள்ள பணம், நகைகள், மதுபானங்கள் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் தலைமை நிர்வாக அதிகாரி விகாஸ் ராஜ் தெரிவித்தார்.

 உளுந்தூர்பேட்டை அருகே பகலில் வீடு புகுந்து பணம், நகை கொள்ளை... | nakkheeran

தெலங்கானாவில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரம் நெருங்கி வருகிறது. இந்நிலையில்  அரசியல்வாதிகள் வாக்காளர்களை கவர  சட்டவிரோதமாக பணம் மற்றும் பரிசு பொருட்கள், மது, உள்ளிட்ட பொருட்கள் கொடுத்து வருகின்றனர். அதனை தடுக்கும் வகையில் தேர்தல் அதிகாரிகளும், போலீசாரும் பல இடங்களில் சோதனை சாவடி அமைத்து தீவிர சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் தெலுங்கானாவில் ஆங்காங்கே பெரும் பணத்துடன், மதுபானம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறு ஹைதராபாத்  அப்பா சந்திப்பில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக சென்ற கார்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ஆறு கார்களில் சட்டவிரோதமாக பணம் கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 

கார்களை முழுமையாக சோதனை செய்த போலீசார் பணம் நிரப்பப்பட்ட சூட்கேஸ்களில் பணம் இருப்பதை கண்டுப்பிடித்தனர். இந்த சோதனையில் ஆறு கார்களில் மொத்தம் ரூ. 6.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.  பணம் பற்றிய விவரங்கள் மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் காட்டப்படாததால் பணம் பறிமுதல் செய்த போலீசார்  வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விசாரித்து வருகின்றனர். இதுவரை ரூ.198 கோடியே 30 லட்சத்துக்கும் அதிகமான ரொக்கம் , ரூ.178 கோடியே 81 லட்சத்துக்கும் அதிகமான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் அரிசி, குக்கர், புடவைகள் மற்றும் பிற பரிசுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.