தேர்தலில் நான் போட்டியிடாதது தவறு- பிரசாந்த் கிஷோர்
நிதிஷ்குமார் வாக்குறுதிபடி1.5 கோடி மகளிருக்கு தலா ரூ.2 லட்சம் கொடுத்தால் பீகாரை விட்டே வெளியேறுவேன் என ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பீகார் சட்டப்பேரவை தேர்தலில் நான் போட்டியிடாதது தவறு, எங்கள் கட்சி 4 %க்கும் குறைவான வாக்குகளை பெறும் என்று நான் ஒரு போடும் எதிர்பார்க்கவில்லை. பீகாரில் வெற்றி பெறாமல் நான் பின் வாங்க மாட்டேன். அதற்கு எவ்வளவு காலமாகும் என்று எனக்கு தெரியவில்லை. நேர்மையாக மேற்கொண்ட எங்கள் முயற்சி தோல்வியில் முடிந்தது. ரூ.10,000 கொடுக்கவில்லை என்றால் நிதிஷ்குமார் கட்சி 25 இடங்களில்கூட வெற்றி பெற்றிருக்காது. நிதிஷ்குமார் அளித்த வாக்குறுதி படி, பீகார் பெண்கள் ஒன்றரை கோடி பேருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கும் வாக்குறுதியை நிறைவேற்றினால் அரசியல் மட்டுமல்லாது பீகாரை விட்டும் வெளியேறுவேன்” என்றார்.


