உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று பதவியேற்பு விழா!!

 
th

ஆந்திர பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா,  மூத்த வழக்குரைஞர் கே.வி. விஸ்வநாதன் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்துள்ளார்.  இவர்களின் இருவரின்  பெயரையும் கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்து நிலையில் குடியரசு தலைவரின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

supreme court

உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளின் பணியிடங்கள் 34 ஆக உள்ளது.  நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் எம்ஆர்.ராசா ஆகியோர் சில தினங்களுக்கு முன்பு பணி ஓய்வு பெற்ற நிலையில் நீதிபதிகளில் எண்ணிக்கை 32 ஆக குறைந்தது.  வரும் நாட்களில் நீதிபதி கே.எம். ஜோசப் ஜூன் 16ஆம் தேதியும் , நீதிபதி அஜய் ரஸ்தோகி ஜூன் 17ஆம் தேதியும்,  நீதிபதி ராமசுப்பிரமணியன் ஜூன் 29ஆம் தேதியும்,  நீதிபதி கிருஷ்ண முராரி ஜூலை 8ம் தேதியும் ஓய்வு பெறுகின்றனர். 

tn

இந்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன், ஆந்திர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதியாக இன்று பதவியேற்கின்றனர். இதன் மூலம் நீதிபதிகள் எண்ணிக்கை மீண்டும் 34 ஆக உள்ளது. மூத்த வழக்கறிஞரான கே.வி. விஸ்வநாதன் பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழுள்ள கோவை சட்டக் கல்லூரியில் படித்தவர். தமிழ்நாடு பார் கவுன்சிலில் 1988 ஆம் தேதி பதிவு செய்து வழக்கறிஞராக   பணியை தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.