அடுத்த 20-30 ஆண்டுகளுக்கு பாஜக ஒரு ஆதிக்க அரசியல் சக்தியாக இருக்கும்- பிரசாந்த் கிஷோர்

 
பிரசாந்த் கிஷோர்

மோடி 3-வது முறையாக ஆட்சி அமைப்பார் என்று பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கணித்த நிலையில், அடுத்த 20-30 ஆண்டுகளுக்கு பாஜக ஒரு ஆதிக்க அரசியல் சக்தியாக இருக்கும் என தற்போது கூறியுள்ளார்.

Image

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும். பா.ஜனதாவுக்கு சவால் விடும் வகையில் போட்டியாளர்கள் இல்லை. பா.ஜனதா ஆட்சியில் மக்கள் ஏமாற்றம் அடைந்து இருக்கலாம். ஆனால் பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிராக பரவலான கோபத்தை நாங்கள் கேள்விபட்டதே இல்லை. மேற்கு மற்றும் வடக்கில் பா.ஜனதாவுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டதாக தெரியவில்லை என தேர்தல் முடிவுக்கு பின்னர் பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கணித்து இருந்தார். 

Image

இந்நிலையில் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், “தேர்தல் வியூக வகுப்பாளரான நான், எண்ணிக்கைகள் குறித்து பேசியிருக்கக் கூடாது. கடந்த 2 ஆண்டுகளில் 2 தவறான கணிப்புகளை செய்துவிட்டேன். ஒன்று மேற்கு வங்க தேர்தல், மற்றொன்று 2024 மக்களவைத் தேர்தல். நான் தவறான கணிப்பை செய்துவிட்டேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். இனி எண்கள் குறித்து நான் பேசவே மாட்டேன். அடுத்த 20-30 ஆண்டுகளுக்கு பாஜக ஒரு ஆதிக்க அரசியல் சக்தியாக இருக்கும். 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனித்து 300+ இடங்களை பிடிக்கும் என்று கணித்தது பொய் ஆகிவிட்டது. மோடி மீது மக்களுக்கு கோபம் இருக்கிறது என்று முன்பே கூறியிருந்தேன். காங்கிரஸுக்கு இந்த தேர்தல் தோல்வி தான்! ராகுல் செல்வாக்கும் அதிகரிக்கவில்லை.” என்றார்.