பீகாரில் 40 வருடமாக வென்று வந்த தொகுதியை பிரசாந்த் கிஷோரிடம் பறிகொடுத்த பாஜக
பீகாரில் 40 வருடமாக வென்று வந்த தொகுதியை பாஜக இழந்து உள்ளது.
பீகாரில் பங்கிப்பூர் தொகுதியில் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார். 40 ஆண்டுகளாக பாஜக வசம் இருந்த பங்கிப்பூர் தொகுதி பறிபோனது. இந்திய அரசியலில் பீகார் எப்போதுமே மாற்றத்திற்கான களமாகவே இருந்து வந்திருக்கிறது. நீண்டகாலமாக நிதீஷ் குமாரின் ஆட்சிக் காலத்தையும், பாரம்பரிய அரசியல் பின்னணிகளையும் கண்டு சலித்துப் போன பீகார் மக்களுக்கு, இன்று பிரசாந்த் கிஷோர் ஒரு மாபெரும் நம்பிக்கை ஒளிக் கற்றையாக உருவெடுத்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் 30 ஆண்டுகால அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட பாங்கிபூர் தொகுதி இடைத்தேர்தலில், பிரசாந்த் கிஷோர் தனது ஜன் சுராஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு 18,953 வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றுள்ளார். 63,203 வாக்குகளைப் பெற்று, 49% வாக்குகளுடன் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது ஜன் சுராஜ் இயக்கம். வெற்று வாக்குறுதிகளையும், மாய பிம்ப அரசியல் வியூகங்களையும் தாண்டி, அடிமட்ட மக்களின் தேவைகளைப் பேசும் ஒரு புதிய அரசியல் களத்தை பீகார் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். பிரசாந்த் கிஷோரின் இந்த எழுச்சி, பீகாருக்கு மட்டுமல்ல... இந்திய அரசியலுக்கே ஒரு புதிய பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது.
இதேபோல் மத்திய பிரதேசத்தில் டட்டியா தொகுதியை தக்க வைத்துகொண்டது காங்கிரஸ். குஜராத்தில் மஞ்சல்பூர் தொகுதியில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.

