அரசன் வீழ்த்தப்பட்டான்! இந்தியா கூட்டணிக்கு நன்றி- பிரகாஷ் ராஜ்

 
Prakash raj modi

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது.  

Narendra Modi bigger actor than me, says actor Prakash Raj | Narendra Modi  bigger actor than me, says actor Prakash Raj

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. கடந்த முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருந்த நிலையில் இந்த முறை கூட்டணி அல்லாமல் ஆட்சி அமைக்க முடியாத நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. இதுவரை வெளியான முடிவுகளின்படி பாஜக 294 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 231 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பிற கட்சிகள் 17 இடங்களில் முன்னிலையில் உள்ளது.


இந்நிலையில் தேர்தல் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், “அரசன் வீழ்த்தப்பட்டான். இப்போது கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது. வேறொருவரின் ஆதரவுடன் நடக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதனை சாத்தியப்படுத்திய இந்தியா கூட்டணிக்கு நன்றி! நம் நாட்டிற்காக நாங்கள் நன்றாகப் போராடினோம்... மேலும் தொடர்வோம்... ” எனக் குறிப்பிட்டுள்ளார்.