“தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்”- பிரஜ்வல் ரேவண்ணா

 
பிரஜ்வல் ரேவண்ணா

பாலியல் பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வரும் பிரஜ்வல் ரேவண்ணா 31-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகிறார்.

Prajwal Revanna plan to hide abroad | வெளிநாட்டிலேயே தலைமறைவாக இருக்க பிரஜ்வல்  ரேவண்ணா திட்டம்?

பிரஜ்வல் ரேவண்ணாவின் சுமார் 3,000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் ஜெர்மனியில் இருந்து இந்தியா திரும்பும் பிரஜ்வல் ரேவண்ணா, கர்நாடக சிறப்பு புலனாய்வு குழு முன் மே 31ல் விசாரணைக்கு ஆஜராவதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதுதொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணா வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் மே 31ம் தேதி இந்தியா வந்துவிடுவேன். அன்று காலை 10 மணிக்கு விசாரணைக்கு ஆஜராவேன். சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். நான் நீதித்துறையை நம்புகிறேன்.


அப்பா, அம்மா, தாத்தா, குமாரண்ணா, நாட்டு மக்கள் மற்றும் ஜேடிஎஸ் தொண்டர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வெளிநாட்டில் இருந்தபோது யூடியூப் செய்திகள் மூலம் என் மீதான குற்றச்சாட்டைப் பார்த்தேன். பாலியல் தொடர்பான புகாரில் என்னுடைய பெயரை அரசியல் ரீதியாக பயன்படுத்தினார்கள்” எனக் கூறியுள்ளார்.