சாணக்கியர் கூறியது உண்மைதான் என்பதை ராகுல் காந்தி நிரூபித்துள்ளார்.. பா.ஜ.க. எம்.பி. பிரக்யா தாக்கூர் தாக்கு

 
ராகுல் காந்தி

வெளிநாட்டு பெண்ணுக்கு பிறந்த மகன் ஒரு போதும் தேசபக்தனாக இருக்க முடியாது என்று சாணக்கியர் கூறியதை உண்மை தான் என்று ராகுல் காந்தி நிரூபித்துள்ளார் என்று பா.ஜ.க. எம்.பி. பிரக்யா தாக்கூர் விமர்சனம் செய்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி தனது இங்கிலாந்தில் பயணத்தின்போது, பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசுகையில்,  இந்திய ஜனநாயக கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதை தடுக்க மைக்குகள் அணைக்கப்படுகின்றன. நாடாளுமன்றத்தில் சீன விவகாரத்தை எழுப்ப எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி இல்லை. நாட்டில் எதிர்க்கட்சி என்ற கருத்தை அரசாங்கம் அனுமதிக்கவில்லை என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசாங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்தார்.

வெளிநாட்டவருக்கு பிறந்த ஒருவர் தேசபக்தனாக இருக்க முடியாது… ராகுல் காந்தியை தாக்கிய பிரக்யா சிங் தாகூர்

ராகுல் காந்தியின் கருத்துக்கு கோபால் மக்களவை தொகுதியின் பா.ஜ.க. எம்.பி. பிரக்யா தாக்கூர் பதிலடி கொடுத்துள்ளார். பிரக்யா தாக்கூர் கூறியதாவது: வெளிநாட்டு பெண்ணுக்கு பிறந்த மகன் ஒரு போதும் தேசபக்தனாக இருக்க முடியாது என்று சாணக்யா கூறியிருந்தார். அவர் கூறியது உண்மை என்பதை ராகுல் காந்தி நிரூபித்துள்ளார். உங்கள் தாய் (சோனியா காந்தி) இத்தாலியை சேர்ந்தவர் என்பதால் நீங்கள் இந்தியாவை சேர்ந்தவர் அல்ல என்று நாங்கள் கருதினோம். 

வெளிநாட்டவருக்கு பிறந்த ஒருவர் தேசபக்தனாக இருக்க முடியாது… ராகுல் காந்தியை தாக்கிய பிரக்யா சிங் தாகூர்

வெளிநாட்டுக்கு சென்று, நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பில்லை என்று சொல்கிறீர்கள், இதை விட வெட்கக்கேடானது வேறு எதுவும் இருக்க முடியாது. ராகுல் காந்திக்கு அரசியலில் வாய்ப்பு அளிக்கக் கூடாது, நாட்டை விட்டே தூக்கி எறிய வேண்டும். நாடாளுமன்றம் சுமூகமாக செயல்பட்டால் அதிக வேலைகளை நடக்கும் ஆனால் அதிக பணி இருந்தால் அவர்கள் (காங்கிரஸ்) வாழ மாட்டார்கள், அவர்களின் இருப்பு முடிவுக்கு வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.