இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் கலந்தாய்வு ஒத்திவைப்பு!
Jul 6, 2024, 13:18 IST1720252082940

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் கலந்தாய்வு மறுஅறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் முறைகேடு தொடர்பான வழக்குகளை ஜூலை 8ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ள நிலையில், இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட NEET UG கலந்தாய்வின் அட்டவணை வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்று நடைபெறுவதாக இருந்த இளநிலை மருத்துவக் கலந்தாய்வு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீட் தொடர்பான முக்கிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் 8ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதால் கலந்தாய்வை மத்திய அரசு ஒத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.