மோடி 3.0- புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் அறிவிப்பு

 
மோடி

மோடி அரசு பதவியேற்று கிட்டத்தட்ட 24 மணி நேரத்தை நெருங்கும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையில் இலாகாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மத்திய அமைச்சர்களின் இலாக்காக்கள் இதுவரை ஒதுக்கப்படாத நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி,  சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக நிதின் கட்கரி தொடர்கிறார்.

Image

அஜய் தம்டா, ஹர்ஷ் மல்ஹோத்ரா இருவரும் சாலை போக்குவரத்துத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வெளியுறவு அமைச்சராக ஜெய்ஷங்கர் தொடர்கிறார். ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடியுடன் ஜெய்ஷங்கரும் இத்தாலி செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சராக அமித்ஷா தொடர்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.