திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான்? தேவஸ்தானம் விளக்கம்

 
திருப்பதி

திருப்பதி  அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருமலை மாதவ நிலையத்தில் தாங்கள் உண்ட அன்னப்பிரசாதத்தில் பூரான் இருந்ததாக பக்தர் ஒருவர் கூறிய குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது. ஏழுமலையான் தரிசனத்திற்காக வரும்  ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு வழங்குவதற்காக தேவஸ்தானம் அதிக அளவில் அன்னப்பிரசாதத்தை தயார் செய்கிறது. எனவே அதிக அளவில் செய்யப்படும் அன்னப்பிரசாதத்தில்  பூரான் முழுவதுமாக   இருந்ததாக பக்தர் குறிப்பிட்டது ஆச்சரியமாக உள்ளது. 

தயிர் சாதம் செய்ய  முதலில் சூடாக உள்ள சாதத்தை நன்றாக ஆரிய பின்னர் தயில் ஊற்றி இயந்திரத்தில் கலக்கப்படும் அவ்வாறான நிலையில் பூரான் அப்படியே இருப்பது முற்றிலும் திட்டமிட்டு தேவஸ்தானத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்து திட்டமிட்ட செயல் என்றுதான் கருத வேண்டும். எனவே இதுபோன்ற பொய்யான செய்திகளை பக்தர்கள் நம்ப வேண்டாம் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவித்துள்ளது.