பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே காலமானார்

 
tb

பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோயால் காலமானார்  . அவருக்கு வயது 32.

tn

பிரபல நடிகையும் மாடலுமான பூனம் பாண்டே உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர். 2013 ஆம் ஆண்டு நஷா என்னும் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான இவர் தனது அரை நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விமர்சனங்களை சந்தித்து வந்தார்.

tn

கடந்த 2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பை போட்டியில் வென்றால் நிர்வாணமாக  மைதானத்தில் வலம் வருவேன் என்று கூறி பரபரப்பினை  ஏற்படுத்தினார் . பாலிவுட் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் படங்களிலும் நடித்துள்ளார். சர்ச்சைக்குரிய பாலிவுட் நடிகையாக வலம் வந்த பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது மறைவு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.