நவீன் பட்நாயக் உடல்நலம் குன்றியதிற்கு பின்னணியில் சதி உள்ளது: பிரதமர் மோடி

 
பிரதமர் மோடி

ஒடிசா பரப்புரையில், நவீன் பட்நாயக்கின் உடல்நிலையை இழுத்து, வி.கே.பாண்டியனை மறைமுகமாக தாக்கி பிரதமர் மோடி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Odisha CM calls on PM | Prime Minister of India

ஒடிசாவில் பரப்புரை மேற்கொண்ட பிரதமர் மோடி, “ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் உடல்நிலை சீர்குலைந்து வருவதற்கு பின்னால் சதி இருக்கலாம். கடந்த ஓராண்டாக நவீன் பட்நாயக்கின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவது குறித்து அவருக்கு நெருக்கமானவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். திரை மறைவில் அதிகாரத்தை ருசித்து வரும் சிலரது லாபி இதில் அடங்கி இருக்கிறதோ என சந்தேகம் எழுந்துள்ளது. 

நவீன் பட்நாயக்கிற்கு ஏற்பட்டுள்ள திடீர் உடல்நலக்குறைவு அவரது நலன் விரும்பிகளை கவலைப்பட வைத்துள்ளது. உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் பின்னணியில் சதித்திட்டம் இருப்பதாக அவர்கள் நம்புகின்றனர். ஒடிசாவில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் நவீன் பட்நாயக்கின் உடல்நிலை சீர்குலைந்தது குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்படும், விசாரித்து உண்மையை கூறுவோம்” என்றார்.