"வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை கொண்டாடுங்கள்" - பிரதமர் மோடி

 
tn

குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நிஷான் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி இன்று தனது வாக்கினை செலுத்தினார். 

election commision

நாடு முழுவதும் உள்ள 93 மக்களவைத் தொகுதிகளில் இன்று மூன்றாம் கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. ஒரு லட்சத்துக்கு 85 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன; குஜராத் மாநிலத்தில் ஒரே கட்டமாக 25 தொகுதிகளிலும், கர்நாடகாவில் மீதமுள்ள 14 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திநகர் மக்களவைத் தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார் பிரதமர் மோடி. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவின் தேர்தல் செயல்முறை, தேர்தல் மேலாண்மை உலக ஜனநாயக நாடுகளுக்கு நல்ல முன்னுதாரணமாக திகழ்கிறது; சுமார் 64 நாடுகளில் தேர்தல்கள் நடக்கின்றன; உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்கள் தேர்தல் நடைமுறைகளை ஆய்வு செய்து ஒப்பிட வேண்டும் இந்த தேர்தல் ஆண்டு ஜனநாயகத்தின் கொண்டாட்டம் போன்றது; திரளான மக்கள் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்  என்று தெரிவித்தார்.