ஜாமினில்தான் விடுவிக்கப்பட்டு உள்ளோம் என்பதை ராகுல் நினைவில் கொள்ள வேண்டும்- மோடி

 
மோடி

காங்கிரஸ் இனிமேல் ஒட்டுண்ணி கட்சி என்று அழைக்கப்படும், கூட்டணி கட்சிகளுக்குள் ஒட்டுண்ணி போல காங்கிரஸ் ஊடுருவுகிறது என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

Image


மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி,  “மக்களவையில் நேற்று ராகுல்காந்தி குழந்தைத்தனமாக நடந்துகொண்டார். இந்த குழந்தை திடீரென்று... கட்டிப்பிடிக்கும்..., கண்ணடிக்கும். ஜாமினில்தான் விடுவிக்கப்பட்டு உள்ளோம் என்பதை ராகுல் நினைவில் கொள்ள வேண்டும். அனைத்து தேர்தல்களிலும் மக்களால் நிராகரிக்கப்பட்ட ராகுல்காந்தி, அனுதாபத்தை பெற புதிய நாடகம் நடத்துகிறார். தேர்தலில் தோல்வி அடைந்த பிறகும் காங்கிரஸ் கட்சி தற்போது வரை பாடம் படிக்கவில்லை. மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்றத்தை போல ஒரு பிம்பத்தை உருவாக்க காங்கிரஸ் முயன்றது.

2029ம் ஆண்டிலும் காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சி வரிசையில்தான் இருக்கும். 13 மாநிலங்களில் ஒரு தொகுதியைக் கூட கைப்பற்ற முடியாத ராகுல் காந்தி எப்படி ஹீரோவாக முடியும்? காங்கிரஸ் 100க்கு 99 இடங்களை வாங்கவில்லை. 543க்கு 99 இடங்களை பெற்றுள்ளது. மூன்றாவது முறையாக 100 தொகுதிகளை கூட வெல்ல முடியாமல் காங்கிரஸ் தோற்றுள்ளது. 290க்கும் மேற்பட்ட இடங்களை வென்று மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியை மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக நிராகரித்துள்ளனர். 1984 ஆம் ஆண்டுக்கு பிறகு 10 முறை மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது. 10 மக்களவை தேர்தல்களில் ஒருமுறை கூட 250 தொகுதிகளை காங்கிரஸ் வென்றதில்லை. 99 எனும் வலையில் சிக்கி தவித்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் பெற்ற 99 இடங்களும் கூட்டணி கட்சிகளால் கிடைத்தது. கூட்டணி கட்சிகள் இல்லை என்றால் காங்கிரஸ் பூஜ்ஜியம். காங்கிரஸ் இனிமேல் ஒட்டுண்ணி கட்சி என்று அழைக்கப்படும், கூட்டணி கட்சிகளுக்குள் ஒட்டுண்ணி போல காங்கிரஸ் ஊடுருவுகிறது” என்றார்.