இந்திய பொருளாதார வளர்ச்சி வேகம் பெறுகிறது- பிரதமர் மோடி

 

இந்திய பொருளாதார வளர்ச்சி வேகம் பெறுகிறது- பிரதமர் மோடி

இந்தியா பொருளாதார வளர்ச்சி மீண்டும் அதிகரித்துவருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்திய பொருளாதார வளர்ச்சி வேகம் பெறுகிறது- பிரதமர் மோடி

இந்திய தொழிலக கூட்டமைப்பு ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “இந்திய வளர்ச்சி வரலாற்றில் தொழிற்சாலைகளின் பங்கு மிக முக்கியமானது, உலகத்தோடு சேர்ந்து இந்தியாவும் வளர்ச்சி பெறுவதில் முனைப்பாக உள்ளது. ஒரு காலத்தில் அன்னிய முதலீட்டை ஐயத்துடன் பார்த்த இந்தியா இன்று அனைத்து முதலீடுகளையும் வரவேற்கிறது. இந்தியாவில் தொழில் புரிவதை எளிதாக்க அனைத்து முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது.

இந்தியாவில் தயாரான பொருட்களை வாங்கும் அளவுக்கு மக்களிடம் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது ஒரு காலத்தில் விவசாயம் ஒரு வாழ்வாதாரமாக மட்டுமே கருதப்பட்டுவந்தது. தற்போது இந்திய விவசாயிகள் உள்நாட்டு சந்தையுடன் மட்டுமே விட்டுவிடாமல் உலக சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்தார்.