செல்ஃபி வீடியோ வெளியிட்ட மோடி- கிடுகிடுவென உயர்ந்த பாலோவர்கள்!
உலகின் அதிக இன்ஸ்டாகிராம் பாலோவர்களை (10 கோடியே 50 லட்சம்) கொண்ட அரசியல் தலைவராக உயர்ந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

உலகின் அதிக இன்ஸ்டாகிராம் பாலோவர்களை (10 கோடியே 50 லட்சம்) கொண்ட அரசியல் தலைவராக உயர்ந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. நீட் தொடர்பாக சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட வீடியோவிற்கு பின்பாக, வாரத்திற்கு 40 லட்சம் பேர் அதிகரித்துள்ளனர். அவருக்கு அடுத்தபடியாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 44 மில்லியன் பாலோவர்களை கொண்டுள்ளார்.
More strict actions against paper leaks to come in tomorrow’s Cabinet! pic.twitter.com/NRysBukk5U
— Narendra Modi (@narendramodi) July 23, 2026
அண்மையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவை தடுப்பது மற்றும் தேர்வு முறைகளை சீரமைப்பது தொடர்பாக மாணவர்களுக்கு முக்கிய வாக்குறுதிகளுடன் பிரதமர் மோடி செல்பி வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ 24 மணி நேரத்திற்குள் 30.3 கோடி பார்வைகளை கடந்து உலக சாதனை படைத்தது குறிப்பிடதக்கது.

