மீண்டும் நாட்டு மக்களின் முழு அன்பையும், ஆசிகளையும் பெறுவோம் - பிரதமர் மோடி

 
modi

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா தொடங்கியுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

மக்களவை தேர்தல் அறிவிப்புகளை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் வெளியிட்டார். அதன்படி மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நடப்பு மக்களவை தேர்தலில் 97 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1,82 கோடி முதல்முறை வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 49.7 பேரும், பெண் வாக்காளர்கள் 47.01 கோடி பேரும் உள்ளனர். 88.4 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 48,044 பேர் உள்ளனர். 

rajiv kumar

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலை விட தற்போதைய தேர்தலில் வாக்காளர்கள் 6% அதிகம். 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் விரும்பும் பட்சத்தில் அவர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம். 100 வயதுக்கு மேல் நாட்டில் 1.02 லட்சம் வாக்களர்கள் உள்ளனர். ஏப்ரல் 01ம் தேதி 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் வரும் தேர்தலில் வாக்களிக்க் தகுதி. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தலை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா தொடங்கியுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தொடர்ந்து 3வது முறையாக 140 கோடி குடும்ப உறுப்பினர்கள் மற்றும் 96 கோடி வாக்காளர்களின் முழு அன்பையும் ஆசிகளையும் பெறுவோம் என குறிப்பிட்டுள்ளார்.