பிரதமர் தலைமையில் இன்று நிதிஆயோக் நிர்வாக குழு கூட்டம் - 7 மாநில முதல்வர்கள் புறக்கணிப்பு

 
modi

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்  நிர்வாக குழு கூட்டம் என்று நடைபெறுகிறது. 

modi

பிரதமர் மோடி தலைமையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது .நிதி ஆயோக் நிர்வாக குழுவுக்கு பிரதமர் மோடி தலைவராக உள்ள நிலையில் மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள் ,மத்திய அமைச்சர்கள் நிதி ஆயோக் குழுவில் உள்ளனர்.  இந்த சூழலில் இன்று நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பொருளாதாரம், விவசாயம் மற்றும் சுகாதாரம் தொடர்பான பிரச்சனைகள் விவாதிக்கப்பட உள்ளது.  குறிப்பாக இக்கூட்டத்தில் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை  வளர்ந்த நாடாக மாற்றும் நோக்கத்துடன் சுகாதாரம் மேம்பாடு, பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் , உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடைபெறும் என்று தெரிகிறது.

modi

 தமிழ்நாடு, டெல்லி ,தெலுங்கானா, மேற்கு வங்கம் ஆகிய 7 மாநிலங்களின் முதலமைச்சர்கள் இந்த நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில் , மற்ற  மாநிலங்கள் , யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் மத்திய அமைச்சர்கள் ஆகியோர் இந்த கூட்டத்தில் இன்று பங்கேற்க உள்ளனர். கடந்த  2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இக்கூட்டம் நடைபெறவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது.