"வரலாற்று வெற்றி" - பிரதமர் மோடி நன்றி

 
மோடி

தேசிய ஜனநாயக கூட்டணியின் மீது 3வது முறையாக மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இன்றுடன் முடிவுக்கு வருகிறது தியானம்.! மாலை டெல்லி புறப்படுகிறார் பிரதமர்  மோடி.!


நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. கடந்த முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருந்த நிலையில் இந்த முறை கூட்டணி அல்லாமல் ஆட்சி அமைக்க முடியாத நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. இதுவரை வெளியான முடிவுகளின்படி பாஜக 290 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 235 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பிற கட்சிகள் 18 இடங்களில் முன்னிலையில் உள்ளது.


இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “தேசிய ஜனநாயக கூட்டணியின் மீது 3வது முறையாக மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இந்திய வரலாற்றில் தே.ஜ கூட்டணியின் இந்த வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது. மக்கள் காட்டிய அன்புக்கு தலைவணங்குகிறேன். கடந்த பத்தாண்டுகளில் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் நாங்கள் செய்த நல்ல பணிகளைத் தொடர்வோம் என்று உறுதியளிக்கிறேன். அனைத்து  பாஜக தொண்டர்களையும் வணங்குகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.