“இந்தியாவை 2047-க்குள் வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற வேண்டும்”- பிரதமர் மோடி

 
ச்

டெல்லி செங்கோட்டையில் 80-வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். 

அப்போது பேசிய பிரதமர் மோடி, “சிறிய கனவுகள் இனி போதாது. நாம் பெரிய கனவுகளைக் காண வேண்டும். பெரிய கனவுகள் நமது சிந்தனையை விரிவுபடுத்தி, சிந்தனையின் எல்லைகளை அகலப்படுத்துகின்றன. இந்தியாவை 2047-க்குள் வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும். இந்த கனவை நாம் அடைந்தே தீர வேண்டும். கடந்த 12 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர். வளர்ச்சியை நோக்கி செல்லும் 140 கோடி இந்தியர்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அடுத்த தலைமுறை பாதுகாப்பு உபகரணங்கள் என்பது நமக்கு மிகவும் அவசியமானதாக இருக்கிறது. அதே நேரத்தில் மற்ற நாடுகளுக்கு ராணுவ தளவாடங்களை இன்னும் அதிக அளவில் நாம் ஏற்றுமதி செய்ய வேண்டும். உலகத்தின் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி மையமாக இந்தியா மாற வேண்டும். அதற்கு இன்னமும் அதிக அளவில் விமான நிலையங்கள், துறைமுகங்களை நாம் கட்டமைக்க வேண்டும்.

இன்றைக்கு சிலர் நாட்டில் உணவு இல்லை, எரிபொருள்கள் இல்லை, பெட்ரோல் இல்லை, டீசல் இல்லை என பொதுமக்கள் மத்தியில் கடுமையான பயத்தை விதைக்கிறார்கள். போர் சமயத்திலும் கூட மக்களை அச்சத்தில் வைத்திருக்க பார்க்கிறார்கள். ஆனால் அந்த சவால்களை எல்லாம் உடைத்தெறிந்து மக்களுக்கு தேவையானவற்றை செய்து வருகிறோம். விவசாயிகளின் அத்தனை சுமைகளையும் அரசு தனது தோள்களில் சுமக்கிறது. முந்தைய ஆட்சி காலங்களில் பொதுமக்கள் மத்தியில் ஒரு பெரிய அச்ச உணர்வும், பய உணர்வும் இருந்து வந்தது. ஆனால் அவையெல்லாம் இன்று மாற்றப்பட்டுள்ளது. பெருவெள்ளம், பெருந் தொற்று என பல்வேறு சவால்கள் இருந்தாலும் நாட்டு குடிமக்கள் தான் முதன்மை என்ற விஷயத்தில் தெளிவாக இருக்கிறோம். இந்தியா மீதான உலகத்தின் பார்வை மாறியுள்ளது; இந்தியா அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக சென்று கொண்டிருக்கிறது. 3 மிகப்பெரிய செமி கண்டக்டர் ஆலைகள் வர உள்ளன” என்றார்.