“இந்தியாவின் நீண்ட காலம் பதவியில் இருக்கும்”- பிரதமர் மோடி

 
“இந்தியாவின் நீண்ட காலம் பதவியில் இருக்கும்”- பிரதமர் மோடி

இந்தியாவின் நீண்ட காலம் பதவியில் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

Image

இந்நிலையில் என்டிஏ கூட்டணி முதல்வர்கள் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “மக்களே இறைவனின் வடிவமாக திகழ்கிறார்கள். பிரதமராக நீண்டகாலம் சேவை செய்வது எனது பாக்கியம். என்னுடன் இணைந்து பயணித்த அனைவருக்கும் நன்றி. இந்த பயணத்தை தனிப்பட்ட சாதனையாக கருதவில்லை. கடந்த 12 ஆண்டுகளில் அதிகளவில் மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். அரசாங்கமாகவும், மக்கள் பிரதிநிதிகளாகவும் இரவு பகலாக உழைக்க வேண்டும். 140 கோடி மக்கள் நம் மீது வைத்துள்ள எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும்.

NDA கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முதலமைச்சர்களின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய நலன்களையும் பிராந்திய அபிலாஷைகளையும் முன்னெடுத்துச் செல்வதற்கான கூட்டு உறுதிப்பாடே NDA-வின் பயணத்தை வழிநடத்திச் செல்கிறது. இந்த உணர்வு நமது ஜனநாயகத்தை வலுப்படுத்தியுள்ளது, கூட்டுறவு கூட்டாட்சி முறையை ஆழப்படுத்தியுள்ளது மேலும் வளர்ச்சியை விரைவுபடுத்தியுள்ளது. கடந்த 12 ஆண்டுகளில், பல்வேறு துறைகளிலும் முன்னேற்றத்தை முன்னெடுத்த ஒரு நிலையான அரசாங்கத்தை நமது NDA வழங்கியுள்ளது. நாட்டிற்கும், 'VIKISIT BHARAT' (வளர்ச்சியடைந்த பாரதம்) எனும் தொலைநோக்குப் இலக்கை நோக்கி சேவை செய்வதில், நாங்கள் புதுப்பிக்கப்பட்ட உற்சாகத்துடன் தொடர்ந்து ஒன்றிணைந்து பணியாற்றுவோம்.” என்றார்.