“மாநில வளர்ச்சிக்காக மத்திய அரசு கொடுக்கும் நிதி கொள்ளை”- பிரதமர் மோடி

 
mOdi

கேரளா சட்டசபை தேர்தல் பாலக்காடு மண்டலத்தில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பாலக்காடு கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார் .

அப்போது பேசிய பிரதமர் மோடி, “கேரளா மாற்றத்தின் பாதையில் உள்ளது, இங்கே பாஜக தான் ஏ டீம். இதுவரை ஆண்ட காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கேரளாவில் எந்த வளர்ச்சியிலும் ஈடுபடவில்லை. குறிப்பாக மத்திய அரசு மாநில வளர்ச்சிக்காக வழங்கிய நிதி அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இங்கே உள்ள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மாறி மாறி குற்றச்சாட்டு ஒன்றை வைக்கிறார்கள். இருவரில் ஒருவரை ஒருவர் பாஜகவின் B டீம் என்று கூறும் குற்றச்சாட்டு தான் அது. இதன் மூலம் கேரளாவில் பா.ஜ.க தான் A டீம் என்பது தெளிவாகிறது” என்றார்.

பிரச்சார கூட்டத்தை முடித்துக் கொண்டு திருச்சூர் மாவட்டத்தில் நடைபெறும் ரோட் ஷோவுக்கு புறப்பட்டு சென்றார். பிரதமர் கேரளாவில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.