வெற்றி, தோல்வி என்பது அரசியலின் ஒரு பகுதி- மோடி

 
மோடி

வெற்றி, தோல்வி என்பது அரசியலின் ஒரு பகுதி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஒன்றாக இணைந்து ஜனநாயகத்தை மேலும் துடிப்பானதாக மாற்றுவோம்: பிரதமர் மோடி | PM  modi say Together lets make our democracy more vibrant and participative

டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியது. தனிப்பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைக்க பாஜக முடிவு செய்துள்ள நிலையில், இக்கூட்டம் மிக முக்கியமானதாக மாறியுள்ளது. இக்கூட்டத்தில் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அமைச்சரவை மற்றும் 17-வது மக்களவையை கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது. அமைச்சரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. மோடி 2.0வின் கடைசி அமைச்சரவை கூட்டம் இதுவாகும். 

மத்திய அமைச்சரவையின் கடைசிக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “வெற்றி, தோல்வி என்பது அரசியலின் ஒரு பகுதி. இனி வளர்ச்சிக்கான அரசியலில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அமைச்சரவையில் என்னோடு பணியாற்றியதற்கு நன்றி. 10 ஆண்டுகளில் தேசத்திற்கு நிறைய செய்துள்ளோம். நமது சாதனைகளை மக்கள் அங்கீகரித்துள்ளனர். சாதனைக்கான அரசாக மூன்றாம் முறையாக ஆட்சியை நாம் தொடருவோம்.