பாஜக வெற்றிக்கு மக்களின் நம்பிக்கையே காரணம்- பிரதமர் மோடி

 
மோடி

மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையால் பொறுப்பு அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மோடி

 

டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி,  “பாஜக மீது மக்கள் நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. இது 140 கோடி மக்களுக்கு கிடைத்த வெற்றி. தேர்தல் சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் நன்றி. ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். சவால் மிகுந்த மக்களவை தேர்தலை நடத்தி முடித்த இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. தேர்தல் சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் நன்றி. மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளதால் 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ளோம். பாஜகவை வெற்றி பெற வைத்த ஒடிசா மக்களுக்கு நன்றி. கேரளாவிலும் மக்கள் மனதை வென்றிருக்கிறோம். தெலங்கானாவிலும் வெற்றிக் கணக்கை தொடங்கியுள்ளோம். டெல்லி, இமாச்சல், குஜராத்தில் மக்கள் எங்களை முழுவதும் ஆதரித்திருக்கிறார்கள்.

பாஜக வெற்றிக்கு மக்களின் நம்பிக்கையே காரணம். வடக்கு முதல் தெற்கு வரை மக்கள் பாஜக மீது நம்பிக்கை வைத்துள்ளனர். மோடியின் மீதும், மோடியின் திட்டத்தின் மீதும் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். 2019ல் மக்கள் பாஜக மீது வைத்த நம்பிக்கையை 2024ல் நிரூபித்துள்ளோம். மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையால் பொறுப்பு அதிகரித்துள்ளது. பெண்களின் வாக்கு சதவீதம் அதிகரித்தது வேறு எந்த நாட்டிலும் இல்லை. கொரோனா காலத்தில் வீழ்ச்சியையும், அதன் பிறகு வளர்ச்சியையும் கண்டுள்ளோம்.

NDA கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதால் கிடைத்த வெற்றி. இந்த வெற்றியை தந்த மக்களுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளேன்; அனைவரும் 10 மணி நேரம் வேலை செய்வார்கள், ஆனால் நான் 18 மணி நேரம் உழைக்கிறேன். கடும் வெப்பத்தையும் பொருட்படுத்தாது இங்கு வந்துள்ளீர்கள், இது எனக்கு மிகுந்த உத்வேகத்தை கொடுத்துள்ளது”” என்றார்.