அடுத்த 20 ஆண்டுகள் பாஜக ஆட்சிதான்- பிரதமர் மோடி

 
Modi

அடுத்த 20 ஆண்டுகளுக்கு பாஜக அரசு தான் மத்தியில் இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இன்னும் 20 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சி தொடரும் என தான் நம்புவதாக மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

மாநிலங்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி, “சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பு எங்கள் ஆட்சியில் உயர்ந்துள்ளது. பொருளாதாரத்தில் 5-ஆம் இடத்தில் இருந்து 3 வது இடத்திற்கு இந்தியா முன்னேறி உள்ளது. தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்விக்கான பழியை சுவர் போல நின்று கார்கே தாங்கிக் கொண்டார். வேறு ஒருவருக்கு செல்ல வேண்டிய தோல்வியின் பழியை கார்கே ஏற்றுக் கொண்டுள்ளார். ஒரு குடும்பம் பாதுகாப்பாக இருக்க கார்கே போன்ற பட்டியலினத்தை சேர்ந்தவர்களை பயன்படுத்துகின்றனர். காங்கிரஸ் கட்சியினர் எஸ்சி, எஸ்டி, ஓபிசிக்கு எதிரான மனப்பான்மை கொண்டவர்கள். நாங்கள் குறிப்பிட்ட பிரிவினரை திருப்திபடுத்துவதற்கு  பதிலாக அனைவரையும்  திருப்திபடுத்துவதற்காக- திருப்திப்படுத்துவதை விட செறிவூட்டலுக்காக பணியாற்றினோம்.

கடந்த 10 ஆண்டுகளில் எங்கள் அரசின் சாதனை மீது இந்திய மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். மூன்றாவது முறையாக நல்லாட்சியைத் தொடர எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளனர். மூன்றாவது பதவிக்காலத்தில், நாங்கள் மூன்று மடங்கு வேகத்தில் பணியாற்றுவோம், மூன்று மடங்கு ஆற்றலைப் பயன்படுத்துவோம், மூன்று மடங்கு பலன்களை வழங்குவோம். நாடு வளர்ச்சியடையும் போது எதிர்கால சந்ததியினரின் கனவுகளை நிறைவேற்றுவதற்கு வலுவான  அடித்தளம் அமைக்கப்படும்” என்றார்.