தேர்தல் நெருங்குவதால் எதிர்க்கட்சியினர் கவலையில் உள்ளனர் - பிரதமர் மோடி பேச்சு!

 
modi

மக்களவை தேர்தல் நெருங்குவதால் எதிர்க்கட்சியினர் கவலையில் உள்ளனர் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில் மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: ஜனநாயகத்தின் தாயாக இந்தியா உருமாறியுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி முதலில் சிலருக்கு சிரமமாக இருந்தாலும், பிறகு அனைவருக்கும் பயனுள்ளதாக மாறியுள்ளது. ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி  உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது இந்தியா.  17வது மக்களவை கூட்டத் தொடரில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மிகவும் கடிமான காலகட்டத்தை சபாநாயகர் சிறப்பாக வழி நடத்தியுள்ளார்.

modi

கொரோனா காலகட்டத்தில் கூட இந்திய நாட்டின் வளர்ச்சி தடைபடவில்லை. கடந்த 5 ஆண்டுகள் இந்திய நாட்டில் சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றத்தை பாஜக அரசு ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்குவதால் எதிர்க்கட்சியினர் கவலையில் உள்ளனர். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளால் தான் மத்திய அரசின் சக்தி அதிகரித்துள்ளது.