"மோடியை சீனாவுக்கு தூதராக நியமிக்க வேண்டும்" - சுப்பிரமணியன் சுவாமி கடும் சாடல்

 
tn

பிரதமர் மோடியை சீனாவுக்கு தூதராக நியமிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி சாடியுள்ளார்.

subramanian swamy

அருணாச்சல பிரதேசத்தை பல ஆண்டுகளாக சீனா சொந்தம் கொண்டாடி வரும் நிலையில் அதற்கு தெற்கு திபேத் என்றும் பெயர் சூட்டி அழைத்து வந்தது.  சமீபத்தில் 11 குடியிருப்பு பகுதிகள்,  12 மலைகள்,  நான்கு ஆறுகள் ஒரு ஏரி மற்றும் ஒரு மலைப்பகுதிக்கு புதிய பெயர்களை அதிகாரப்பூர்வமாக சீனா அறிவித்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது.  சீனாவுடனான இந்தியாவின் வணிகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அருணாச்சலப் பிரதேசம் வரையில் எல்லைப் பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளது. இது குறித்து பிரதமர் மோடி அமைதி காத்து வருவதாக எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் பிரதமர் மோடியை சீனாவுக்கு தூதராக நியமிக்க வேண்டும்  என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி  விமர்சித்துள்ளார்.  


 


அருணாச்சலில் இருந்து லடாக் வரை இந்திய பகுதிகளை சீனா தட்டிப் பறிக்கிறது. சீனா ஆக்கிரமித்ததாக கூறப்படும் இடத்திற்கு யாரும் வரவில்லை. நாங்களும் போகமாட்டோம் என மோடி கூறி வருகிறார் எனவும் விமர்சித்துள்ளார்.