’Oh My God' செய்தியாளர்களுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய பிரதமர் மோடி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ...

 
modi

 ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அங்கு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய வீடியோ  இணையத்தில் வைரலாகி வருகிறது.  

ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.  3 நாட்கள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த மோடி, இன்று டெல்லி திரும்பினார்.  முன்னதாக, டென்மார்க் பயணத்தின் போது பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் மேட் - ஐ சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.  அப்போது இரு நாட்டு உறவு, பொருளாதார ஒப்பந்தங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.  தொடர்ந்து அங்கு வசிக்கும் இந்தியர்களுடனும் அவர் உரையாடினார்.  அனைவரும் இந்தியா வருமாறும் அவர்களுக்கு பிதமர் மோடி அழைப்பு விடுத்தார்.  

மோடி

இந்த நிலையில் டென்மார்க்கில் இருக்கும்போது பிரதமர் மோடியிடம் , செய்தியாளர்கள் பேட்டியெடுக்க முயன்றனர். பிரதமரின் அரசு முறை பயணம் குறித்து செய்தி சேகரிப்பதற்காக,  டென்மார்க் சென்ற  இந்திய செய்தி நிறுவனங்கள்  அவரை மறித்து கேள்வியெழுப்பினர். அவர் சந்திப்பு முடிந்து தனியாக காருக்குச் செல்லும்போது அவர்கள், இடை மறித்து, தங்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்று கூறினர்.  செய்தியாளர்கள் சட்டென மைக்கை நீட்டி கேள்வி எழுப்பியதை  சற்றும் எதிர்ப்பாராத பிரதமர் மோடி , ‘ஓ மை காட்’ எனக்கூறிவிட்டு  பதிலளிக்க முடியாமல் திணறினார். 

மோடி

தொடர்ந்து அவர்கள் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பிரதமர் மோடி  பதவியேற்ற நாள் முதல்  பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை பிரதமர் மோடி தவிர்த்து ஏற்கனவே வருவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் பத்திரிக்கையாளர்களுக்கு பதிலளிக்க முடியாமல்  பிரதமர் மோடி திணறியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.