காந்தி ஜெயந்தி: பிரதமர் மோடி, ராகுல் காந்தி மரியாதை..!
மகாத்மா காந்தியின் 155வது பிறந்தநாளை ஒட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவ ராகுல்காந்தி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய தேசத்தந்தை என போற்றப்படும் மகாத்மா காந்தியின் 156வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மகாத்மா காந்தியின் நினைவிடம், சிலைகள் மற்றும் திருவுருவப்படங்களுக்கு மலர்த்தூவியும், மாலையணிவித்தும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் டெல்லி ராஜ்காட்டி உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல் மக்களவை எதிர்கட்சித் தலைவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.