3வது ஆட்சி காலத்தில் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகிறோம் - பிரதமர் மோடி பேட்டி!

2047ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற கனவை நிறைவேற்ற இந்த பட்ஜெட் கூட்டம் வழிகாட்டும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மகாலட்சுமி, வெற்றியையும் விவேகத்தையும் தருபவர். ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினருக்கு அன்னை லட்சுமி தேவியின் அருள் கிடைக்க வேண்டும். 3வது முறையாக சேவையாற்ற வாய்ப்பு அளித்துள்ள நாட்டு மக்களுக்கு நன்றி. 3வது முறையான ஆட்சியில் பா.ஜ.க அரசு தாக்கல் செய்யும் முதல் முழு பட்ஜெட் இது.
3வது ஆட்சி காலத்தில் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். பல வரலாற்று சிறப்புமிக்க மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. செயல்பாடு, மாற்றம் என்பது தான் எங்களின் தாரக மந்திரம். 2047ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற கனவை நிறைவேற்ற பட்ஜெட் கூட்டம் வழிகாட்டும் என கூறினார்.