“நான் விடுத்த கோரிக்கைகளை மக்கள் ஏற்றதால் தங்கத்தின் இறக்குமதி குறைந்துள்ளது”- பிரதமர் மோடி
விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைப்பவர்கள் Plaster of parisல் செய்த சிலைகளை வாங்கக்கூடாது. களிமண்ணால் செய்யப்படும் சிலைகள் சுற்றுசூழலை மாசுபடுத்தாது. விஞ்ஞானித்தின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, “ஜூன் மாதத்தில் சி-295 ரக விமானம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. நமது நாட்டிலேயே சி-298 ரக விமானங்கள் தயாரிக்கப்படவுள்ளது. மேலும் 40 எண்ணிக்கையில் C-295 ரக விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் தயாரான 3 போர்கப்பல்கள் கடற்படையில் இணைந்துள்ளன. விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைப்பவர்கள் Plaster of parisல் செய்த சிலைகளை வாங்கக்கூடாது. களிமண்ணால் செய்யப்படும் சிலைகள் சுற்றுசூழலை மாசுபடுத்தாது. விஞ்ஞானித்தின் அடிப்படையில் செயல்பட வேண்டும். மூடநம்பிக்கைகளை பின்பற்றக்கூடாது. நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று, தங்க நகை புதிதாக வாங்கவில்லை என்றும், தேவைப்பட்டால் குடும்பத்தில் இருக்கும் பழைய தங்க நகைகளை உருக்கி புதிய நகை செய்து கொள்ளப்போவதாகவும் பல குடும்பத்தினர் என்னிடம் தெரிவித்துள்ளனர். நான் விடுத்த கோரிக்கைகளை மக்கள் ஏற்றதால் தங்கத்தின் இறக்குமதி குறைந்துள்ளது. மக்கள் தங்களின் பழைய தங்கத்தை பயன்படுத்தி புதிய நகைகள் வாங்குவதை கடைப்பிடித்தனர்.
ஹர்கிலா எனப்படும் அரிய பறவை, இயற்கையை தூய்மையாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு காலத்தில் மூடநம்பிக்கையால் புறக்கணிக்கப்பட்ட இந்த பறவையை அறிவியலாளர் பூர்ணிமாதேவி பர்மன் விழிப்புணர்வு மூலம் மக்களின் மனதில் பாதுகாக்க வேண்டிய உயிரினமாக மாற்றினார். இன்று ஆயிரக்கணக்கான பெண்கள் ஹர்கிலா படையாக இணைந்து இந்த அரிய பறாவையை பாதுகாத்து வருகிறார்கள். சரியான தகவல், சமூக மாற்றத்தை உருவாக்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பல சகாப்தங்களாக மரங்களின் வேர்களை வழிநடத்தி உருவாக்கப்படும் இந்தப் பாலங்கள், காலப்போக்கில் மேலும் வலிமை பெறுகின்றன. இயற்கையுடன் இணைந்து வாழும் வாழ்க்கை முறைக்கும், பொறுமைக்கும், படைப்பாற்றலுக்கும் இவை சிறந்த எடுத்துக்காட்டு. இந்த தனித்துவமான வேர்ப்பாலங்களை யுனெஸ்கோ உலக பாரம்பரியப் பட்டியலில் சேர்க்க இந்தியா விண்ணப்பித்துள்ளது” என்றார்.

