பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

 
s s

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

Operation Sindoor Live Updates: PM Modi briefs President Murmu on Operation  Sindoor - India Today

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் இன்று அதிகாலை பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதேபோல் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தின் போது இந்திய விமானங்களை தாக்க வந்த பாகிஸ்தான் போர் விமானம் ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. தீவிரவாத முகாம்களை நோக்கி இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 22 அன்று 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களை நடத்தியதற்காக இந்திய ஆயுதப்படைகளை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை பாராட்டினார் .

ஆபரேஷன் சிந்தூர் எதிரொலியாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு ஒரு சில முக்கிய அலுவல்களில் மட்டுமே பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள். உளவுத்துறை தகவல் அடிப்படையில் அடுத்த சில நாட்களுக்கு பயணம் தேவையில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.