வாட்ஸ் ஆப் சேனல்களில் இணைந்தார் பிரதமர் மோடி!

 
whatsapp

பிரதமர் மோடி வாட்ஸ் ஆப் சேனல்களில் இணைந்துள்ளார்.  

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு ‘நாரி சக்தி வந்தன்’ என பெயரிடப்பட்டுள்ளது.   128வது அரசியல் சாசன சட்டத்திருத்த மசோதாவாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்படுகிறது. பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான தொகுதிகளிலும் மூன்றில் ஒரு பங்கு மகளிருக்கு ஒதுக்கப்பட உள்ளது/தொகுதி மறு வரையறை செய்யப்பட்ட பிறகே மகளிர் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வர இருக்கிறது. 

whatsapp

இதனிடையே பிரதமர் மோடி வாட்ஸ் ஆப் சேனல்களில் இணைந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை பிரதமர் மோடி தனது வாட்ஸ் ஆப் சேனல்களில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், வாட்ஸ் ஆப் சேனலில் இணைந்தது த்ரில் ஆக இருந்தது. வாட்ஸ் ஆப் சேனலில் இணைந்து இருங்கள். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் அந்த பதிவில் வெளியிட்டுள்ளார்.