ஹிரோஷிமாவில் காந்தி சிலையை திறந்துவைத்த பிரதமர் மோடி..

 
ஹிரோஷிமாவில் காந்தி சிலையை திறந்துவைத்த பிரதமர் மோடி..


ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள  ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி ,  ஹிரோஷிமா நகரில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார்.

பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்த நாடுகளை கொண்ட ஜி7 கூட்டமைப்பின்  49வது உச்சி மாநாடு  ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.   பங்கேற்பதற்காக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜெர்மனி பிரதமர் ஓலா ஸ்கால்ஸ்,  பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்,  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் தனி விமானங்கள் மூலம் வந்தனர். கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய ஏழு உறுப்பு நாடுகள் மட்டுமே கொண்ட இந்த மாநாட்டில் இந்தியா,  ஆஸ்திரேலியா, பிரேசில்,  இந்தோனேஷியா, தென்கொரியா, மியான்மர், குக் தீவுகள் ஆகிய நாடுகள் சிறைப்பு விருந்தினர்களாக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.

ஹிரோஷிமாவில் காந்தி சிலையை திறந்துவைத்த பிரதமர் மோடி..

அதன்படி  இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். இந்நிலையில், ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி,  அங்குள்ள ஹிரோஷிமா நகரில்  இன்று காந்தி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.  காந்தி சிலையை திறந்து வைத்த பின் பேசிய பிரதமர் மோடி, “ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள ஜப்பான் வந்துள்ளபோது மகாத்மா காந்தி சிலையை திறந்து வைக்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஹிரோஷிமாவில் நிறுவப்பட்டுள்ள காந்தி சிலை அமைதி பாதைக்கு அழைத்து செல்லும்” என்றார்.