’நாட்டு நாட்டு’ பாடலால் இந்தியா பெருமிதம் கொள்கிறது - பிரதமர் மோடி

 
modi

‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு‘ பாடல் ஆஸ்கர் விருதை வென்றுள்ள நிலையில், படக்குழுவை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். 

உலக ரசிகர்கள் எதிர்பார்த்த 95வது ஆஸ்கர் விருதுகள் இன்று அமெரிக்காவில் கோலாகலமாக தொடங்கியது. டால்பி திரையரங்கில் இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கிய இந்த விருது விழாவில் உலகம் முழுவதும் பரிந்துரைக்கப்பட்ட படைப்புகள் போட்டியிட்டன. அதில் இந்தியாவின் சார்பில் ஆர்ஆர்ஆர் படத்திலிருந்து ‘நாட்டு நாட்டு’ பாடல், தி எலிபென்ட் விஸ்பரர்ஸ், ஆல் தட் ப்ரீத்ட் ஆகியவை போட்டியிட்டன.  முதலில் தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப் படத்திற்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ‘ஆர்ஆர்ஆர்’ படத்திலிருந்து போட்டியிட்ட ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில் பங்கேற்ற நிலையில் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. இது ஆர்ஆர்ஆர் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கெளரமாக கருதப்படுகிறது. 
ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரும் இணைந்து நடித்திருந்த திரைப்படம் ‘ஆர்ஆர்ஆர்’. கடந்த ஆண்டு இந்தியாவின் பல மொழிகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.


இந்நிலையில், ஆஸ்கர் விருதை வென்றுள்ள ஆர்.ஆர்.ஆர் படக்குழுவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டு நாட்டு’ புகழ் உலகளாவியது. இன்னும் பல வருடங்கள் நினைவில் நிற்கும் பாடலாக இது இருக்கும். வாழ்த்துக்கள். இந்த விருதால் இந்தியா பெருமிதம் கொள்கிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.