வெறும் 73 நிமிடங்களில் சென்னை-பெங்களூரு பயணம்! புல்லட் ரயிலுக்கு பிரதமர் மோடி ஒப்புதல்

 
பூந்தமல்லி மெட்ரோ ரயில் பாதுகாப்பு சோதனை நிறைவு..!

சென்னை - பெங்களூரு மற்றும் சென்னை - ஹைதராபாத் இடையே புல்லட் ரயில் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி ஒப்புதல் அளித்துள்ளார். 

சென்னை உட்பட நாடு முழுவதும் 4000 கிமீ புல்லட் ரயில் சேவைக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த புல்லட் ரயில் திட்டம் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் அமராவதி ஆகிய நகரங்களை இணைக்கும். இதன் மூலம் சென்னை-பெங்களூர் பயண நேரம் வெறும் 73 நிமிடங்களாகக் குறையும்.

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவைக்காக அதிநவீன ரயில் பெட்டிகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.  8 கோச்சுகளுடன் 557 பேர் பயணிக்கும் வகையில் புல்லட் ரயில் தயாராகிறது.  மணிக்கு 280 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில், பெங்களூருவில் BEML நிறுவனத்தில் வைத்து புல்லட் ரயில் தயாராகிறது.